இப்போதெல்லாம் தமிழகத்தில் ஒரு டிவி சேனல் ஆரம்பிக்க வேண்டும் என்பது ஒரு இன்ஜினியரிங் கல்லூரி ஆரம்பிப்பது போல் மிகவும் சுலபமானது போலும். ஒரு டிவி சேனல் ஆரம்பிக்க நாம் முதலில் மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகத்திடம் ஒப்புதல் வாங்க வேண்டும். மேலும் satellite uplink எனப்படும் frequency range நாம் வாங்க வேண்டும். கடந்த 4-5 ஆண்டுகளில் ஆரம்பித்த டிவி சேனல்கல், குறிப்பாக K.V. தங்கபாலு வின் "மெகா TV", வசந்த & கோ வின் "வசந்த் TV". இந்த "வசந்த் டிவி" நீங்கள் வாய்ப்பு கிடைத்தால் வசந்த் & கோ showroom பக்கம் சென்று பார்த்தீர்கள் என்றால் அங்கு மட்டுமே இந்த சேனல் ஐ நீங்கள் பார்க்க முடியும், வேறு எங்கும் காண முடியாத அதிசயம். இந்த வரிசையில் கடந்த 2011 வருடம் செப்டம்பர் மாதத்தில் ஒரு புதிய செய்திகள் தொலைக்காட்சி SRM குழுமத்தால் உருவாக்கபட்டது, அது தான் புதிய தலைமுறை. ஆரம்பித்த 2 மாதத்தில் TRP எனப்படும் மக்கள் அதிகமாக விரும்பி பார்க்கப்படும் முதல் தொலைகாட்சியாக சன் நியூஸ் சேனல் ஐ பின்னுக்கு தள்ளி முதல் இடம் பிடித்தது. இலங்கை இனபடுகொலை தைரியமாக channel-4 வெளிட்ட உண்மையான காட்சிகளை எந்த கட்சி பாகுபாடும் இல்லாமல் தமிழர்களின் இனபடிகொலை அப்படியே அப்பட்டமாக படம் பிடித்து காட்டியது. ஒவ்வொரு அரசியல் கட்சியும், ஒவ்வொரு டிவி சேனல் மற்றும் ஒரு செய்தி சேனல் ஒன்று வைத்து உள்ளது, மேலும் அந்த கட்சிக்கு சாதகமான வகையில் செய்திகளும் இருக்கும், ஆனால் நடுனிலையான மக்கள் எந்த செய்தியை பார்ப்பது என்ற குழப்பம் இருந்தது, அவர்களுக்கு புதிய தலைமுறை ஒரு பொக்கிஷமாக வந்தது. இவர்களிடம் செய்திகள் மட்டும் அல்ல, பல்வேறு விதமான நிகழ்ச்சியும், புதிய சாதனையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் "களம் இறங்கியவர்கள்", "ஆயுதம் செய்வோம்" நிகழ்ச்சியும் இடம் பெறுகிறது. மேலும் இந்த தொலைகாட்சியின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த SCV எனப்படும் (Sumangali Cable Vision), மூலம் தமிழகம் முழுவதும் கேபிள் இனைப்புகளை பெற்று ஒளிபரப்பி வரும் சன் குழுமம், SCV இணைப்பில் இருந்து புதிய தலைமுறை டிவி ஐ நீக்கிவிட்டது. ஒரு பொருளை மறைத்து வைத்தால் தான் அதிகபட்ச எதிர்பார்ப்பு வரும், அதுபோல் ஒரு செயலை செய்யாதே என்றால் செய்து பார்போமே என்பதே மனிதன் இயல்பு. அது போல் இந்த செயலால் புதிய தலைமுறை டிவி க்கு அதிக எதிர்பார்ப்புகள் வந்து, அதிகமான மக்கள் set top box மூலம் இந்த சேனல் ஐ கண்டு கழிக்க ஆரம்பித்தனர். இன்னும் சன் குழுமம் தான் தான் No.1 என்று விளம்பரம் செய்து, மக்களை முட்டாள் ஆக்க முயற்சி செய்கிறது. ஆனால் மக்கள் ஏமாறாமல் புதிய தலைமுறை டிவி க்கு நல்லதொரு ஆதரவை தந்து கொண்டு தான் இருக்குறார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை.
கொசுறு தகவல் : தமிழ்நாட்டில் தமிழ் செய்தி சேனல்கள் மட்டும் 10-12 சேனல்கள் உள்ளன. இவை எல்லாம் மீறி புதிய தலைமுறை முதல் இடத்தில் இருக்கிறது என்றால் அது மிக பெரிய சாதனை.
கொசுறு தகவல் : தமிழ்நாட்டில் தமிழ் செய்தி சேனல்கள் மட்டும் 10-12 சேனல்கள் உள்ளன. இவை எல்லாம் மீறி புதிய தலைமுறை முதல் இடத்தில் இருக்கிறது என்றால் அது மிக பெரிய சாதனை.
No comments:
Post a Comment